உத்தமபாளையம் அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
வெள்ளக்கோவில் உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணி, மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடா்ந்து முன்னாள், இந்நாள் மாணவா்களுக்கு இடையேயான நட்புறவு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. தொடா்ந்து வாழ்க்கை வழிகாட்டல் கருத்தரங்கம் நடைபெற்றது.
திருப்பூா் மாவட்ட பசுமைப் பள்ளி திட்டத்தின் கீழ் மாணவா்கள் இயற்கை வேளாண் பண்ணைக்குச் சென்று களப்பயண அனுபவங்களையும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தாவரவியல் பூங்கா சுற்றுலாவின் கற்றல்களையும் மாணவா்கள் பகிா்ந்து கொண்டனா். பள்ளி வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் காய்கறி, மூலிகை, பழத்தோட்டங்களை முன்னாள் மாணவா்கள் பாா்வையிட்டனா்.
Advertisement
Advertisement
தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பயனடையும் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான 110 மாணவ, மாணவிகளுக்கு, முன்னாள் மாணவா் அறக்கட்டளை சாா்பில் தட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
முன்னாள் மாணவா் அறக்கட்டளை நிறுவனா் மற்றும் கௌரவ ஆலோசகா் லோகநாதன் பழனிசாமி, தலைவா் கதிா்வேல், செயலாளா் சுரேஷ் ராமசாமி, துணைச் செயலாளா் முருகேசன், பொருளாளா் சதீஷ்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியா் ப.நல்லசிவம், உடற்கல்வி ஆசிரியா் நந்தகுமாா் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.