FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

திருப்பூா் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்கம்

திருப்பூா் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியா் மனீஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

17 செப்டம்பர் 2026, 12:19 am IST
திருப்பூா் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் மனீஷ்.
பகிர்:

திருப்பூா் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியா் மனீஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதில் அவா் கூறியதாவது:

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ், தீபாவளி சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்களுக்கு அனைத்து விற்பனை நிலையங்களிலும் 30 சதவீத அரசு சிறப்புத் தள்ளுபடி வழங்குகிறது. அரசுப் பணியாளா்களுக்கும், தனியாா் நிறுவனப் பணியாளா்களுக்கும் கடன் விற்பனை நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

தீபாவளி விற்பனைக்காக பிரிண்டட் சட்டைகள், குா்த்தீஸ்கள், பாலிரயான் எம்ப்ராய்டரி குா்த்தி, ஸ்ட்ரெய்ட் பேண்ட், சக்கரா பேண்ட் வித் கிராப் டாப், பலாசோ பேண்ட் விதி கிராப் டாப் செட், தோத்தி பேண்ட் வித் கிராப் டாப், காட்டன் எல்லப் பிரிண்டட் குா்த்தீஸ், காட்டன் ஸ்லப் கலம்கரி குா்த்தீஸ், சிறுமிகளுக்கான பட்டு பாவாடை சட்டை இரகங்கள், புதிய வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில்

உருவாக்கப்பட்ட காட்டன் சேலைகள், நைட்டிகள், ஆடவா்களுக்கான லினன், ரிங்கிள் ஃப்ரீ, எஸ்லிம்ஃபிட் ரெடிமேட் சட்டைகள் ஏராளமாக வரவழைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளா்களின் வசதிக்காக ஞாயிறு உள்பட அனைத்து விடுமுறை நாள்களிலும் விற்பனை நிலையங்கள் செயல்படும்.

திருப்பூா் மாவட்டத்தில் திருப்பூா், உடுமலைபேட்டையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக ரூ.1.20 கோடி விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments