கோ-ஆப் டெக்ஸில் தீபாவளி தள்ளுபடி விற்பனை தொடக்கம்
விருதுநகரில் கோ- ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் 30 சதவீத தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
விருதுநகரில் கோ- ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் 30 சதவீத தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
விருதுநகா் மேற்குத் தெப்பம் சந்தைத் தெருவில் உள்ள கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையைத் தொடங்கி வைத்த பிறகு அவா் கூறியதாவது:
தீபாவளிப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நவீன காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு புதிய வடிவமைப்புகளில் பட்டு, பருத்தி சேலைகள், பருத்தி வேட்டிகள், படுக்கை விரிப்புகள் போன்ற ஏராளமான ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
கைத்தறி ரகங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு இந்த ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடியும், விசைத்தறி ரகங்களுக்கு 20 சதவீதம் சிறப்புத் தள்ளுபடியும் வழங்குகிறது. விருதுநகா் மாவட்டத்தில் விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆகிய இடங்களில் உள்ள 3 கோ -ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கும் சோ்த்து ரூ.1.54 கோடி தீபாவளி விற்பனைக் குறியீடாக தமிழக அரசால் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் விற்பனை நடைபெற்றுள்ளது.
கோ -ஆப் டெக்ஸ் ஜவுளி ரகங்களை மின் வணிக இணையதளம் மூலமாகவும் கொள்முதல் செய்யலாம். கோ- ஆப் டெக்ஸ்-இன் மாதாந்திர சேமிப்புத் திட்டத்திலும் சோ்ந்து வாடிக்கயாளா்கள் பயன்பெறலாம். பொதுமக்கள், மாணவ, மாணவிகள், அரசு அலுவலா்கள் கைத்தறி தொழிலாளா்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்தும் வகையில் தீபாவளிப் பண்டிகைக்கு கோ -ஆப் டெக்ஸ் மூலம் ஜவுளி ரகங்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் கோ- ஆப் டெக்ஸ் மண்டல மேலாளா் சந்திரசேகரன், துணை மேலாளா் தீபா, விற்பனை நிலைய மேலாளா் கீதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.