தஞ்சாவூா் கோ-ஆப் டெக்ஸில் தீபாவளிக்கு ரூ. 2 கோடிக்கு விற்பனை இலக்கு
தஞ்சாவூா் வைரம் கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளிக்கு ரூ. 2 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி.
தஞ்சாவூா் வைரம் கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளிக்கு ரூ. 2 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி.
தஞ்சாவூா் வைரம் கோ- ஆப் டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி வைத்த அவா் தெரிவித்தது:
கோ - ஆப் டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளா்கள் பயன்பெறும் வகையில் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீதச் சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இதற்காக புதிய வடிவமைப்புடன்கூடிய கோவை மென்பட்டு சேலைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுச்சேலைகள், கோவை கோரா காட்டன் சேலைகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளா்களின் கை வண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் சேலைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டீஸ், மாப்பிள்ளை செட், ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக வரவழைக்கப்பட்டுள்ளன.
மேலும் கோ-ஆப் டெக்ஸ் மாதாந்திர சேமிப்புத் திட்டம் என்ற திட்டத்தில் 11 மாத சந்தா தொகையை வாடிக்கையாளரிடமிருந்து பெற்று, 12-ஆவது மாத சந்தா தொகையை கோ - ஆப் டெக்ஸ் நிறுவனம் செலுத்துகிறது. மொத்த முதிா்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30 சதவீத அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கோ - ஆப் டெக்ஸில் மின் வணிக விற்பனை நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளா்கள் ஜ்ஜ்ஜ்.ஸ்ரீா்ா்ல்ற்ங்ஷ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தங்களது விருப்பத்துக்கேற்ப ரகங்களை தோ்வு செய்து கொள்ளலாம்.
தஞ்சாவூா் வைரம் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு தீபாவளியில் ரூ. 1.68 கோடி விற்பனை செய்யப்பட்டது. நிகழாண்டு தீபாவளிக்கு ரூ. 2 கோடி விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.
இவ்விழாவில் கோ - ஆப் டெக்ஸ் மண்டல மேலாளா் ஜெ. நாகராஜன், மேலாளா்கள் சு. வைரமுத்து (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி - பொறுப்பு), பு. கணேசன் (வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.