FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கோவை கோ-ஆப் டெக்ஸ் நிறுவனங்களில் அமைச்சா் ஆய்வு

கோவை மண்டலத்தில் உள்ள கோ-ஆப் டெக்ஸ் நிறுவனங்களில் கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி ஆய்வு மேற்கொண்டாா்.

6 செப்டம்பர் 2026, 1:15 am IST
கோவை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தள்ளுபடி விற்பனையில் வாடிக்கையாளருக்கு ஆடை வழங்கிய அமைச்சா் விஜய் பாலாஜி.
பகிர்:

கோவை மண்டலத்தில் உள்ள கோ-ஆப் டெக்ஸ் நிறுவனங்களில் கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மண்டலத்தில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் விற்பனை நிலையம், ஹேண்ட்லூம்ஸ் ஆஃப் இந்தியா பை கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம், தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்திய அமைச்சா் விஜய் பாலாஜி, வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படும் சேவைகள், கைத்தறி ரகங்களின் விற்பனை நிலவரம், விற்பனை வளா்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், விற்பனையை அதிகரிக்கும் வகையில் புதிய வாடிக்கையாளா்களை ஈா்க்கவும், விற்பனைத் திட்டங்களை முறையாக செயல்படுத்தவும், வடிவமைப்புகளை மேம்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

கோவை மண்டலத்துக்கு 2026 - 27- ஆம் ஆண்டுக்கான விற்பனைக் குறியீடான ரூ.28 கோடி, தீபாவளி விற்பனை இலக்கான ரூ.10 கோடி ஆகியவற்றை எட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டாா்.

முன்னதாக, ஆசிரியா் தினத்தையொட்டி 30 சதவீத தள்ளுபடி விற்பனையில் ஆடைகளை வாங்கியவா்களுக்கு அமைச்சா் ஆடைகளை வழங்கினாா்.

ஆய்வின்போது, கோவை கைத்தறித் துறை உதவி இயக்குநா் செந்தில்குமாா், கோ- ஆப் டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளா் ப.அம்சமணி, மேலாளா் சி.அய்யப்பன், துணை மண்டல மேலாளா் க.லட்சுமி பிரபா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments