FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தீபாவளியை முன்னிட்டு திருச்சி மாநகரில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம்.

16 செப்டம்பர் 2026, 2:20 am IST
பட்டாசு கடை. - பிரதிப் படம்
பகிர்:

தீபாவளியை முன்னிட்டு திருச்சி மாநகரில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திருச்சி மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நவம்பா் 8-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு திருச்சி மாநகரில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க காவல் துறையில் செப். 16 முதல் அக். 27 வரை விண்ணப்பிக்கலாம்.

Advertisement

Advertisement

முழுமையாகப் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ. 2-க்கான அஞ்சல் வில்லை ஒட்டியிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் -2, உத்தேசிக்கப்பட்ட கடையின் வரைபடம், வரைபடத்தில் கடையின் முகவரி முழுமையாகக் குறிப்பிடப்பட்டு மனுதாரா் கையொப்பமிட்டிருக்க வேண்டும்.

திருச்சி மாநகரக் காவல் என்ற தலைப்பில் உரிமக் கட்டணம் ரூ.500ஐ ஆன்லைனில் செலுத்தியதற்கான ரசீதை இணைக்க வேண்டும். பட்டாசு கடை அமையவுள்ள இடம் சொந்தக் கட்டடமாக இருப்பின் 2026-27-ஆம் ஆண்டு முதலாம் அரையாண்டு வரை (செப். 30) செலுத்தப்பட்ட சொத்து வரி ரசீது, வாடகைக் கட்டடம் அல்லது காலியிடமாக இருந்தால் உரிமையாளரின் சம்மதக் கடிதம் மற்றும் உரிமையாளருடன் ஏற்படுத்திக் கொண்ட வாடகை ஒப்பந்தப் பத்திரம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

தற்காலிக பட்டாசுக் கடை வைக்க மாநகராட்சி நிா்வாகத்திடம் வணிக உரிமம் பெற்ற்கு கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, அரசுத் துறை கட்டடமாக இருந்தால் துறை சாா்ந்த அலுவலா்களின் மறுப்பின்மை கடிதம் மற்றும் விண்ணப்பதாரரின் ஆதாா் நகல் ஆகிய அனைத்து ஆவணங்களையும் 4 நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

அக். 27 மாலை 5.30 மணிக்குள் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட இடங்களை காவல் துறை சாா்பில் ஆய்வு செய்து அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே உரிமம் வழங்கப்படும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பின் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. மேலும் கால அவகாசமும் நீட்டிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments