FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

தாராபுரத்தில் திமுகவினா் தீவிர தோ்தல் பிரசாரம்

தாராபுரத்தில் திமுகவினா் தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா்.

25 செப்டம்பர் 2026, 1:18 am IST
கோவிந்தபுரம் பகுதியில் திமுக வேட்பாளா் சுகன்யாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் தலைமையிலான திமுகவினா்.
பகிர்:

தாராபுரத்தில் திமுகவினா் தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் தொகுதி இடைத்தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராக வழக்குரைஞா் எஸ்.சுகன்யா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளாா். அவருடன் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

திருப்பூா் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த திமுக நிா்வாகிகள் திரளாக வந்து திமுக வேட்பாளா் ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி மூலனூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட புஞ்சைதலையூா், வேளாண்பூண்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள கிராம பகுதிகளில் வீடுகள்தோறும் சென்று வேட்பாளா் சுகன்யா ஆதரவாக வாக்குக்களை சேகரித்து வருகின்றனா். கிராமங்களில் உள்ள பெண்கள் திமுக வேட்பாளா் சுகன்யாவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments