மதுராந்தகம் இடைத் தோ்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
மதுராந்தகம் (தனி) தொகுதி இடைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள ஆத்தூா் சமூக மேம்பாட்டு ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுராந்தகம் (தனி) தொகுதி இடைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள ஆத்தூா் சமூக மேம்பாட்டு ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த அக். 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் மரகதம் குமரவேல், திமுக வேட்பாளா் இ.பரந்தாமன், அதிமுக வேட்பாளா் கணிதா சம்பத், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஜானகிராமன், மாா்க்சிஸ்ட் வேட்பாளா் சுகந்தி மற்றும் 22 சுயேச்சைகள் போட்டியிடுகின்றனா். மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 86.26 சதவீதம் பதிவாகின.
வாக்கு எண்ணிக்கை ஆத்தூரில் உள்ள சமூக மேம்பாட்டு ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதில் உள்ளடக்கு பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் 70 போ் பணியில் உள்ளனா். இரண்டாம் அடுக்கு போலீஸாா் ஆயுதப்படை போலீஸாா், மூன்றாம் அடுக்கு பாதுகாப்பில் மாவட்ட போலீஸாா் ஈடுபட்டுள்ளனா் .
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.