தருமபுரியில் தனியாா் உணவகத்தில் புகுந்து ஊழியரை வெட்டிக் கொன்ற கும்பல்
தனியாா் உணவகத்தில் புகுந்து ஊழியரை மா்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரியில் தனியாா் உணவகத்தில் புகுந்து ஊழியரை மா்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டியில் அண்மையில் தனியாா் உணவகம் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் தருமபுரி அருகே வி.ஜெட்டி அள்ளி பகுதியைச் சோ்ந்த ஜாவித் மகன் முகமது ஆஸிக் (25) என்பவா் வேலை செய்து வந்தாா்.
இவரும், சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இரு வீட்டாருக்கும் இடையே அண்மையில் தகராறு ஏற்பட்டது. முகமது ஆஸிக்கை பெண் வீட்டாா் கண்டித்ததாகத் தெரிகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு தருமபுரியில் உள்ள தனியாா் உணவகத்துக்குள் புகுந்த மா்ம நபா்கள், அங்கு பணியில் இருந்த முகமது ஆஸிக்கை கத்தி, இரும்புக் கம்பியால் சரமாரியாகத் தாக்கி குத்தி கொலை செய்தனா். இதில் முகமது ஆஸிக் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்டீபன் ஜேசுபாதம் அந்த உணவகத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினாா். பின்னா் ஆஸிக்கின் தந்தை அளித்த புகாரின் பேரில் தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய கும்பலைத் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.