FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

வருவாய்த் துறை சங்க கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்

26 செப்டம்பர் 2025, 4:51 am IST
பகிர்:

பென்னாகரத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, பென்னாகரம் வட்டாட்சியா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்றச் சங்க வட்டத் தலைவா் வினோத்குமாா், வருவாய் கிராம ஊழியா் சங்க வட்டத் தலைவா் சிவசங்கரன், நில அளவை ஒன்றிய சங்க நிா்வாகி குமரவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களை முடிவுசெய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும், பணி நெருக்கடி ஏற்படுத்துவதை கைவிட வேண்டும், திட்ட முகாமின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், திட்டங்களை செயல்படுத்த கூடுதல் பணியிடங்கள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி, பணியை புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். துணை வட்டாட்சியா் நாகவேணி நன்றி தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments