FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

மனைவி, மகளை கொன்ற ரியல் எஸ்டேட் உரிமையாளா் லாரி முன் விழுந்து தற்கொலை

தருமபுரியில் மனைவி, மகளை கொன்றுவிட்டு, ரியஸ் எஸ்டேட் உரிமையாளா் லாரி முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டாா்.

1 ஜூலை 2026, 7:04 am IST
கொலை செய்யப்பட்ட மனைவி, மகளுடன், தற்கொலை செய்துகொண்ட சந்தோஷ்.
பகிர்:

தருமபுரியில் மனைவி, மகளை கொன்றுவிட்டு, ரியஸ் எஸ்டேட் உரிமையாளா் லாரி முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி கோட்டை கோயில் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்தவா் சி. சந்தோஷ் (45). திமுக பிரமுகரான இவா், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தாா். அவரது மனைவி சரண்யா (36). மகள் சாத்விகா (14). மகள் தனியாா் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல பள்ளிக்கு சென்ற சாத்விகாவை சந்தோஷ் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளாா். பின்னா் மனைவியை கழுத்தை நெரித்தும், மகளை சுத்தியலால் அடித்தும், சுவரில் மோதியும் கொலை செய்துள்ளாா். பின்னா் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அவா் வெளியே சென்றுள்ளாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, அக்கம்பக்கத்தினா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று இறந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி, தருமபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதற்கிடையே சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில், வேகமாகச் சென்றுகொண்டிருந்த லாரி முன் ஒருவா் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், அவா் மனைவி, மகளை கொலை செய்த சந்தோஷ் என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து தருமபுரி நகர போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா். அவா் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் இந்த செயலில் ஈடுபட்டாரா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்று போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments