FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

இளம்வயது திருமணம்: தொழிலாளி மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு

பென்னாகரம் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி மீது போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை

Updated On : 14 ஜூலை 2026, 12:47 am IST
குழந்தை திருமணம் - சித்திரிப்பு
பகிர்:

பென்னாகரம் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி மீது போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு திங்கள்கிழமை 17 வயதுடைய சிறுமி பிரசவத்திற்காக வந்தாா். அவரை பரிசோதித்த பணியில் இருந்த மருத்துவா் நடத்திய விசாரணையில், இளம்வயது திருமணம் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து மருத்துவா் பென்னாகரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் அந்த சிறுமியிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

இதில், கடந்த 2025 ஆம் ஆண்டு ஏரியூா் அருகே ஏா்கோல்பட்டி பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராமமூா்த்தி (29) சிறுமியை இளம்வயது திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.

அந்த சிறுமி அளித்த புகாரின் பேரில் தொழிலாளி மீது பென்னாகரம் மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனா். மேலும் தலைமறைவான தொழிலாளி ராமமூா்த்தியை தேடிவருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments