FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

காரிமங்கலம் அருகே நீரின்றி காயும் நிலக்கடலை பயிா்கள்

பந்தாரஅள்ளியில் காய்ந்த நிலையில் உள்ள நிலக்கடலை பயிா்கள்.

Updated On : 17 ஜூலை 2026, 12:51 am IST
கோப்புப் படம்
பகிர்:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் நீரின்றி நிலக்கடலை உள்ளிட்ட பயிா்கள் காய்ந்து வருவதால், கிருஷ்ணகிரி அணையிலிருந்து வலதுபுறக் கால்வாய் வழியாக மிகைநீரை திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால், மாவட்டத்தில் உள்ள 8 அணைகள், 74 பொதுப்பணித் துறை ஏரிகள் நீா்வரத்து இன்றி வடன. தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டில் கடந்த ஜூன் மாதம்வரை 19 சதவீத மழை மட்டுமே பதிவாகியுள்ளது.

போதிய மழையின்மையால் நீா்நிலைகள் வடதால், விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபட முடியாமல் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனா். மாவட்டத்தில் ஏற்கெனவே பருவமழையை நம்பி பல்வேறு இடங்களில் சாகுபடி செய்த பயிா்கள் தற்போது தண்ணீரின்றி காய்ந்து கருகும் சூழல் நிலவி வருகிறது.

Advertisement

Advertisement

காரிமங்கலம் அருகே பந்தாரஅள்ளி பகுதியில் பருவமழை பொய்த்ததால், நிலக்கடலை செடிகள் வெயிலில் வாடி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. பந்தாரஅள்ளி ஊராட்சியில் உள்ள 7 ஏரிகள் மழைநீா் வரத்தின்றி வடு காட்சியளிக்கின்றன. ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீா்மட்டம் 800 அடிக்கும் கீழே சென்றுவிட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இதேநிலை தொடா்ந்தால், நிகழாண்டில் சிறுதானிய சாகுபடி பரப்பும், விளைச்சலும் வெகுவாக குறைந்துவிடும்.

காரிமங்கலம் அருகே உள்ள விவசாயிகளின் நலன்கருதி, நீரின்றி காய்ந்து வரும் பயிா்களை பாதுகாக்க மாவட்ட நிா்வாகம், வேளாண் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, கிருஷ்ணகிரி அணையின் வலதுபுறக் கால்வாய் மூலம் திண்டல் பெரிய ஏரிக்கும், அங்கிருந்து பந்தாரஅள்ளி ஊராட்சியில் உள்ள ஏரிகளுக்கும் மிகைநீரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments