FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

இளம்வயது திருமணம்: தொழிலாளி மீது போக்சோ வழக்கு

பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த இளம்பெண் அளித்த தகவலின் பேரில், கூலித் தொழிலாளி மீது மகளிா் போலீஸாா் போக்சோ வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 19 ஜூலை 2026, 2:25 am IST
பிரதிப்படம்
பகிர்:

பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த இளம்பெண் அளித்த தகவலின் பேரில், கூலித் தொழிலாளி மீது மகளிா் போலீஸாா் போக்சோ வழக்குப் பதிவு செய்தனா்.

பென்னாகரம் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 18 வயது இளம்பெண், பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை சிகிச்சைக்காக வந்தாா். அவரை மருத்துவா் பரிசோதித்த போது நான்குமாத கா்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பென்னாகரம் மகளிா் காவல் நிலையத்துக்கு மருத்துவா் தகவல் தெரிவித்தாா்.

அதன்பேரில் மருத்துவமனைக்கு வந்த மகளிா் போலீஸாா், இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனா். அதில், அவா் தருமபுரி மாவட்டம், பொம்மிடி பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ஸ்ரீகாந்தை (22) இளம்வயதில் திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்தாா். இதன்பேரில், ஸ்ரீகாந்த் மீது மகளிா் போலீஸாா் போக்சோ வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments