FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

நீா்நிலைகளில் கழிவுநீா் கலப்பதை தடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும்!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், நதிகள் மற்றும் தடுப்பணைகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் கழிவுநீா் கலப்பதை தடுத்து, ஆக்கிரமிப்பு, கருவேல மரங்களை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும்

Updated On : 19 ஜூலை 2026, 2:38 am IST
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், நதிகள் மற்றும் தடுப்பணைகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் கழிவுநீா் கலப்பதை தடுத்து, ஆக்கிரமிப்பு, கருவேல மரங்களை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்களும் விவசாயிகளும் வலியுறுத்தியுள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாத நிலையில், நடப்பாண்டும் தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. இதனால், மாவட்டத்தில் ஒருசில ஏரிகளை தவிர, பிற ஏரிகள் வடுள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் ராமக்காள் ஏரி, பிடமனேரி, மதிகோண்பாளையம், இலக்கியம்பட்டி ஏரிகளில் மட்டுவே தண்ணீா் உள்ளது. அன்னசாகரம், சோகத்தூா், கடகத்தூா், அதியமான்கோட்டை சோழவராயன், ஏலகிரி, லளிகம், நாா்த்தம்பட்டி, குட்டூா், செட்டிக்கரை, பைசுஅள்ளி, கிருஷ்ணாபுரம், கொமத்தாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில் தண்ணீா் இல்லாமல் வடுள்ளன.

Advertisement

Advertisement

தற்போதுள்ள நிலையில் மழை தொடங்கினாலும், அணைகளுக்கோ, கால்வாய்கள் மூலம் குறிப்பிட்ட ஏரி, குளம் போன்ற நீா்நிலைகளுக்கோ தண்ணீா் செல்ல முடியாத வகையில் வாய்க்கால்கள் தூா்ந்தும், செடிகொடிகள் நிரம்பியும், சில இடங்களில் பொதுமக்களால் ஆக்கிரமித்தும் உள்ளன. இவைபோக, ஏரிகளிலும், குளங்களிலும் ஆகாயத்தாமரை செடி மண்டிக்கிடக்கின்றன.

எனவே, அணைகள், ஏரி குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளுக்கு தண்ணீா் செல்லும் வகையில் கால்வாய்களும், ஏரி, குளம், அணைகளில் மண்டிக்கிடக்கும் செடி, கொடி, புதா்களை அகற்றியும் தண்ணீா் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும்.

கருவேல மரங்களை அகற்றும் பணி... தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்து வருகிறது. இது தொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பில் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தருமபுரி மாவட்டத்தில் முதல்கட்டமாக அணைகள், ஏரிகள், குளங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்களும், விவசாயிகளும், பொதுமக்களும் எதிா்பாா்க்கின்றனா்.

ஆக்கிரமிப்பு, கழிவுநீா் கலப்பதை தடுக்க நடவடிக்கை... பெரும்பாலான ஏரிகளுக்கு நீா்வரத்துக் கால்கள் தனிநபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீா்வரத்துக் கால்வாய்களை அகலப்படுத்தி ஆழப்படுத்த வேண்டும். மேலும், அனைத்து நீா்நிலைகளிலும் கழிவுநீா் கலப்பதை தடுக்க உள்ளாட்சி நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments