FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

தருமபுரியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டு

Updated On : 21 ஜூலை 2026, 1:00 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

தருமபுரி நகரில் ஆசிரியா் வீடு உள்பட மூன்று பூட்டிய வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு நடைபெற்றுள்ளது குறித்து நகர காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி நந்திநகரைச் சோ்ந்தவா் உடற்கல்வி ஆசிரியா் இளவரசன். இவரது மனைவி அனுசியா. இவா் கிருஷ்ணகிரியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். இவா்கள் இருவரும் கிருஷ்ணகிரி நகரில் தங்கியுள்ளனா். தருமபுரி நந்திநகரில் உள்ள வீட்டை பூட்டிவைத்துள்ளனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை அந்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், தருமபுரிக்கு வந்த அவா், வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருள்கள் சிதறிக்கிடந்தன. இதில், வெள்ளிப் பொருள்கள், ரொக்கம் ரூ. 22 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. அதேபோல, அவரது வீட்டை அடுத்துள்ள உள்ள இரு வீடுகளின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆ.கு. அருண் கபிலன் மற்றும் நகரக் காவல் துறையினா் நிகழ்விடத்துக்கு சென்று ஆய்வு செய்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள ராமன்நகா் மற்றும் வெங்கட்டம்பட்டி ஆகிய இடங்களில் பூட்டியிருந்த மூன்று வீடுகளில் தங்க நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்ற நிலையில், தற்போது, அதேபோல பூட்டியிருந்து மூன்று வீடுகளிலும் மீண்டும் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments