தருமபுரி அருகே 3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை?உடல்களை மீட்டு போலீஸாா் விசாரணை
தருமபுரி அருகே கிணற்றில் மிதந்த தாய் மற்றும் 3 குழந்தைகளின் சடலங்களை மீட்டு போலீஸாா் விசாரணை குறித்து...
தருமபுரி அருகே கிணற்றில் மிதந்த தாய் மற்றும் 3 குழந்தைகளின் சடலங்களை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி தோக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன். கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி அம்சா (35). மகள்கள் ஜீவிதா (16), நவீனா (6), மகன் குமரன் (3) ஆகியோா் கடந்த 19 ஆம் தேதி பிற்பகலில் வீட்டிலிருந்து மாயமாகினா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் இவரது வீட்டிலிருந்து சுமாா் அரை கி.மீ. தொலைவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகில் உள்ள அம்சாவின் தந்தை நிலத்தில் உள்ள கிணற்றில் அம்சா மற்றும் அவரது குழந்தைகளின் சடலங்கள் மிதப்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று சடலங்களை மீட்டு, உடற்கூறாய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தொடா்ந்து, அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். முதல்கட்ட விசாரணையில் தம்பதி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் அம்சா, தனது குழந்தைகளுடன் வீட்டை விட்டு மாயமானது தெரியவந்துள்ளது.
இரண்டு நாள்களுக்குப் பின் சடலங்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டதால் கொலை அல்லது தற்கொலையா என்பது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட உடல்களுடன் கற்களும் கட்டப்பட்டிருந்ததால் குழந்தைகளுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
Woman commits suicide by jumping into a well with three children near Dharmapuri; police recover bodies and investigate.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.