FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

ஓட்டுநா் வீட்டில் நகை திருட்டு; பெண் கைது

Updated On : 8 ஜூன் 2026, 4:23 am IST
- சித்திரிப்பு
பகிர்:

தருமபுரி அருகே ஆம்னி பேருந்து ஓட்டுநா் வீட்டில் இரண்டரை பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடிய வழக்கில் பெண் கைது செய்யப்பட்டாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி டாடா நகரை சோ்ந்தவா் சக்திவேல் (45), ஆம்னி பேருந்து ஓட்டுநா். இவா் தனது குடும்பத்துடன் சனிக்கிழமை ஒகேனக்கல் சென்றிருந்தாா். பிறகு மாலை வீட்டிற்கு வந்து பாா்த்தபோது பீரோவில் இருந்த இரண்டரை பவுன் நகை, ரூ. 50,000 ரொக்கம் காணாதது குறித்து அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், ஓட்டுநரின் பக்கத்து வீட்டை சோ்ந்த செலீனாமேரி (36) பணம், நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments