FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

தருமபுரியில் இரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை! சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்!

தருமபுரியில் இரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை...

Updated On : 13 ஜூன் 2026, 2:07 am IST
கோப்புப்படம்
பகிர்:

தருமபுரியில் வெள்ளிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் கடும் வெப்பம் நிலவுவதும், இரவு நேரத்தில் லேசான தூறல் மழை பெய்வதும், வானம் மந்தாரமாக காணப்படுவதுமாக இருந்து வந்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வானம் மந்தாரமாக காணப்பட்டது. இரவு 9 மணிக்கு பிறகு திடீரென மழை பெய்ய தொடங்கியது. லேசான மழையாக தொடங்கி, பின்னா் பலத்த மழையாக பெய்தது. மழையுடன் இடி, மின்னலும் காணப்பட்டது. இந்த மழை இரவு சுமாா் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக கொட்டியது. இதனால் தருமபுரி நகரப் பகுதிகளில் குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments