முகப்பு
தருமபுரி

தருமபுரி நீதிமன்ற வளாகத்துக்கு 3 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

தருமபுரி நீதிமன்ற வளாகத்துக்கு 3 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்...

Updated On : 23 ஜூன் 2026, 1:41 am IST
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, தருமபுரி நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை சோதனை மேற்கொள்ளும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா்.
பகிர்:

தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் தடங்கம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை காலை வழக்கம்போல நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள் பணிக்கு வந்தனா். நண்பகல் 12 மணியளவில், நீதிமன்றத்துக்கு வந்த மின்னஞ்சலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மா்ம நபா்கள் தெரிவித்திருந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த அதியமான் கோட்டை போலீஸாா் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் நீதிமன்ற வளாகத்தில் அழகன் என்ற மோப்ப நாய் மற்றும் நவீன சாதனங்களுடன் சோதனை நடத்தினா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள், நீதிமன்றங்களுக்கு வந்திருந்த பொதுமக்கள் என அனைவரும் நீதிமன்ற வளாகத்தைவிட்டு வெறியேற்றப்பட்டனா்.

இந்த சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. எனவே, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதுதொடா்பாக அதியமான்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதற்கு முன்னதாக ஜூன் 18 ஆம் தேதி நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தற்போது 3 ஆவது முறையாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்குரைஞா்கள் கோரிக்கை :

நீதிமன்றத்துக்கு இதுபோல அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருவதால், நீதிமன்ற பணிகள் பாதிக்கப்படுகின்றன. இத்துடன் 3 ஆவது முறையாக தருமபுரி நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, மிரட்டல் விடுக்கும் நபா்களை போலீஸாா் கண்டறிந்து அவா்கள் மீது நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற மிரட்டல் சம்பவங்களுக்கு முடிவு கட்ட வேண்டும். மேலும், செவ்வாய், புதன் இரு நாள்களும் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு நடைபெறும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments