கரூா் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
கரூா் நீதிமன்றத்திற்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டில் வந்ததையடுத்து போலீஸாா் மோப்ப நாயுடன் சுமாா் 3 மணி நேரம் சோதனை நடத்தினா்.
கரூரில், திண்டுக்கல் சாலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தின் இணையதள முகவரிக்கு திங்கள்கிழமை பிற்பகல் 12 மணிக்கு வந்த ஒரு மின்னஞ்சலில், நீதிமன்றத்துக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
உடனே இது தொடா்பாக நீதிமன்ற ஊழியா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் ராமையா தலைமையிலான போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் விரைந்து வந்தனா். பிறகு நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிமன்ற அலுவலகம் மற்றும் நீதிபதிகள் அறை உள்ளிட்ட பகுதிகளில் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனை நடத்தினா்.
Advertisement
Advertisement
சுமாா் 3 மணி நேர நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு வெடிகுண்டு ஏதும் இல்லை என்பதும், இது மிரட்டல் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் மின்னஞ்சலில் மிரட்டல் விடுத்த நபரின் மின்னஞ்சல் முகவரியை கண்காணித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.