FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிளஸ் 2 பொதுத் தேர்வு: 22,388 பேர் எழுதினர்

தருமபுரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் நாள் 57 மையங்களில் 22,388 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர்.

24 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் நாள் 57 மையங்களில் 22,388 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப். 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 57 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 11,675 மாணவர்களும், 10,741 மாணவிகளும் கலந்து கொண்டு தேர்வு எழுதுகின்றனர். இவர்களுடன் தனித் தேர்வர்களாக 518 மாணவர்கள், 297 மாணவிகளும் தேர்வில் பங்கேற்கின்றனர்.

முதல் நாளான வெள்ளிக்கிழமை தமிழ் முதல் தாள் தேர்வுக்காக 22,613 பேர் தேர்வெழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இவர்களில் 225 பேர் தேர்வெழுத வரவில்லை. 22,613 பேர் தேர்வெழுதினர்.

Advertisement

Advertisement

57 முதன்மைக் கண்காணிப்பாளர்களுடன், 9 கூடுதல் கண்காணிப்பாளர்களும், 57 துறை அலுவலர்களும், 20 கட்டுக் காப்பாளர்களும், 23 வழித்தட அலுவலர்களும், 182 பறக்கும் படை அலுவலர்களும், 1,584 அறை கண்காணிப்பாளர்களும், மாற்றுத் திறனாளிகளுக்காக 18 எழுதுநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் அதியமான்கோட்டை அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் முத்து பழனிசாமி, முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி. மகேஸ்வரி ஆகியோரும் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments