FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

வறட்சி: பாலக்கோடு பகுதிகளில் விவசாயிகள் கவலை

மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் பாலக்கோடு பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, நிலக்கடலை பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன. 

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 8:29 am IST
பகிர்:

மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் பாலக்கோடு பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, நிலக்கடலை பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன.
பாலக்கோடு  மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் வறட்சி காரணமாக தண்ணீரின்றி அறுவடைக்குத் தயாராகயிருக்கும் கரும்பு காய்ந்து சரகுகள் மட்டுமே காணப்படும் சூழல் உருவாகியுள்ளது. சிக்காரதன அள்ளியில் ரூ.2 லட்சத்தில் செலவு செய்து பயிரிடப்பட்டுள்ள செல்வம் என்பவரது கரும்பு தோட்டம் அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில் தண்ணீரின்றி காயந்துள்ளன.
இந்த நிலையில்,  சர்க்கரை ஆலை அதிகாரிகள் கரும்புகளை அறுவடை செய்யவிடாமல்  தடுத்து வருவதால் செய்வது அறியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ஒகேனக்கல் தண்ணீரை இப் பகுதிகளுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments