ஜெருசலம் பயணத்துக்கு அரசு உதவிபெற விண்ணப்பிக்கலாம்
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலம் புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசின் உதவித் தொகை பெறுவதற்கு வரு
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலம் புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசின் உதவித் தொகை பெறுவதற்கு வரும் செப். 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றிப் பெறலாம். நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவற்றை www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் "ஜெருசலம் புனிதப் பயணத்துக்கான விண்ணப்பம்' என்று குறிப்பிட்டு, மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807, அண்ணா சாலை, சென்னை- 600002 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.