FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

பத்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி,  கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

பத்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி,  கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கமலேஷ் சந்திரா அறிக்கையை 2016 ஜனவரி 1  முதல் அமல்படுத்த வேண்டும். கிராமப் புறங்களில் பணியாற்றுவோருக்கு 8 மணி நேர வேலை, பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை தங்களது காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.
தருமபுரி மாவட்டத்தில்,  224  கிராமப்புற அஞ்சலங்களில் 504 பேர் பணியாற்றுகின்றனர். இதில், 124 அஞ்சலகங்கள் மூடப்பட்டு,  272 பேர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீதமுள்ள, 100 அஞ்சலகங்களில், 232 பேர் பணியில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், கடிதங்கள் உரியவர்களுக்கு வழங்குவது, பணப் பரிவர்த்தனை, வர்த்தகம் ஆகியவை பாதிக்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments