வெங்கட்டம்பட்டியில் முனியப்பன் கோயில் குடமுழுக்கு விழா
தருமபுரி மாவட்டம், வெங்கட்டம்பட்டியில் உள்ள பழமைவாய்ந்த முனியப்பன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், வெங்கட்டம்பட்டியில் உள்ள பழமைவாய்ந்த முனியப்பன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மூன்று கால பூஜைகள், கும்ப பூஜை, மூலமந்திர ஜபம், மஹா பூர்ணாதி, வேத, நாத, கீத உபசார பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து காலை 9.15 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து வேத மந்திரங்கள் ஓத சுவாமி சிலைகளுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் முனியப்பன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. முனியப்பன் சிலைகளுக்கு அண்மையில் வண்ணம் பூசி புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து தற்போது குடமுழுக்கு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.