கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு
தருமபுரியில் அதிமுக சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு, மாநில உயர்கல்வித் துறை அமைச்சர்கே.பி.அன்பழகன் பரிசு வழங்கினார் .
தருமபுரியில் அதிமுக சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு, மாநில உயர்கல்வித் துறை அமைச்சர்கே.பி.அன்பழகன் பரிசு வழங்கினார் .
தருமபுரி மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், தருமபுரி, பாலக்கோடு, அரூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி என பேரவைத் தொகுதி அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி தொடங்கி மே 23-ஆம் தேதி வரை நடைபெற்ற போட்டியில் மொத்தம் 616 அணிகள் பங்கேற்றன.
இப்போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகள், மாவட்ட அளவிலான இறுதிப் போட்டியில் பங்கேற்று விளையாடின. இதில் பென்னாகரம் தொகுதிக்குள்பட்ட பிக்கிலி அணி முதலிடத்தையும் , அரூர் கொளகம்பட்டி அணி 2-ஆவது இடத்தையும் , பாப்பிரெட்டிப்பட்டி பொம்மிடி அணி 3-ஆவது இடத்தையும், பாலக்கோடு அணி 4 -ஆவது இடத்தையும் பிடித்தன.
வெற்றிபெற்ற அணிகளுக்கு, தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், அமைச்சர் கே.பி.அன்பழகன், முதல் பரிசாக ரூ.ஒரு லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.25 ஆயிரம், நான்காம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் கிரிக்கெட் விளையாட்டுப் பொருள்களை வழங்கினார்.
இவ்விழாவில், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் டி.ஆர். அன்பழகன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் வி.வி.ராஜ் சத்யன், தர்மேஷ்குமார், அ.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.