FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காவல் துறையைக் கண்டித்து செப். 17-இல் பென்னாகரத்தில் பொதுக்கூட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு

காவல் துறை அலுவலர்களின் செயல்பாடுகளை கண்டித்து, பென்னாகரத்தில் வரும் செப். 17ஆம் தேதி கண்டனப் பொதுக் கூட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

காவல் துறை அலுவலர்களின் செயல்பாடுகளை கண்டித்து, பென்னாகரத்தில் வரும் செப். 17ஆம் தேதி கண்டனப் பொதுக் கூட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
தருமபுரியில் புதன்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் ஒன்றியச் செயலர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் இயல்பாக உயர்ந்து வருகிறது. எனவே, மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது.
மாவட்டத்தில் காவல்துறை அலுவலர்களால் தொடர்ந்து ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. தருமபுரி நகரக் காவல் ஆய்வாளர் மற்றும் பென்னாகரம் துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் மக்கள் விரோதப் போக்குகளைக் கண்டித்து வரும் செப். 17ஆம் தேதி கண்டனைப் பொதுக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
பொதுமக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி வரும் செப். 15 முதல் 20ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் தெருமுனைக் கூட்டங்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்கு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம். மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஏ. குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments