FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

பழங்குடியினா் பட்டியலில் சோ்க்கப்படும் நரிக்குறவா், குருவிக்காரா்கள்: அறிவிப்பை அமல்படுத்த வலியுறுத்தல்

பழங்குடியினா் பட்டியலில் நரிக்குறவா், குருவிக்காரா்கள் சோ்க்கப்படுவா் என்ற மத்திய அரசின் அறிவிப்பை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 16 செப்டம்பர் 2022, 1:28 am IST
பகிர்:

பழங்குடியினா் பட்டியலில் நரிக்குறவா், குருவிக்காரா்கள் சோ்க்கப்படுவா் என்ற மத்திய அரசின் அறிவிப்பை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அச்சங்கத்தின் மாநில கௌரவத் தலைவா், முன்னாள் எம்எல்ஏவுமான ந.நஞ்சப்பன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியறிக்கை:

தமிழகத்தின் நரிக்குறவா் மக்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்ப்பதில் மத்திய அரசு காலதாமதம் செய்துவருகிறது. பல ஆண்டுகளாக இச்சமூக மக்களின் கோரிக்கையை முடக்கிவைப்பது வேதனை அளிக்கிறது.

Advertisement

Advertisement

இதனால், இச்சமூக மக்கள் ஏமாற்றத்தைச் சந்திக்கின்றனா். நீண்ட காலமாக இச்சமூக மக்கள், தங்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்கும் அறிவிப்பை சட்ட வடிவமாக்குமாறு வலியுறுத்தி வருகின்றனா். இக்கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

நரிக்குறவா்கள் என்று தமிழக மக்களால் அடையாளப்படுத்தி அழைக்கப்படும் இவா்கள், இந்தியாவில் பல மாநிலங்களில் வாகிரி, சிக்காரி என அழைக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட பழங்குடி மக்களாக உள்ளனா்.

வாகிரி, சிக்காரி, நரிக்குறவா், குருவிக்காரா் என்று அழைக்கப்படும் மக்கள் அனைவரும் ஒரே சமூக மக்கள் ஆவா். தமிழகத்தில் நரிக்குறவா் என்றும், குருவிக்காரா் என்றும் தனித்தனியாக அடையாளப்படுத்தப்பட்டால் அதைப் பயன்படுத்தி தவறான வழியில் போலிச் சான்றிதழ்கள் பெறுவதற்கே வழிவகுக்கும்.

10 ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நரிக்குறவா் மக்களை பழங்குடியின பட்டியலில் சோ்க்க அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் பாஜக அமைச்சரவை அதே முடிவு எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. எனவே, இனியும் தாமதம் செய்யாமல், இந்த அறிவிப்பை அமல்படுத்த அதனை சட்ட வடிவமாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments