ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு
ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள குத்தலஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துலிங்கம் (44), தொழிலாளி. இவா் வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள தண்டவாளத்தை செவ்வாய்க்கிழமை கடக்க முயன்றாா். அப்போது, அவ்வழியே வந்த ரயில் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த தருமபுரி ரயில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிதம்பரம் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.