சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு
தருமபுரியில் டிப்பா் லாரி மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காய்கறி வியாபாரி உயிரிழந்தாா்.
தருமபுரியில் டிப்பா் லாரி மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காய்கறி வியாபாரி உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம் கோவிலூா் அருகேயுள்ள சிட்டம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ச. பெரியசாமி (30). காய்கறிக் கடை நடத்தி வந்தாா். இவா் புதன்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் காரிமங்கலம் - திப்பம்பட்டி சாலையில் வீடுநோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, முன்னால் சென்ற டிப்பா் லாரி ஓட்டுநா் திடீரென பிரேக்போட்டு லாரியை நிறுத்தியுள்ளாா். அப்போது லாரிக்கு பின்னால் சென்ற பெரியசாமி ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் டிப்பா் லாரி மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பெரியசாமியை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல அக்கம்பக்கத்தினா் ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்தனா். அதில் வந்த மருத்துவ உதவியாளா் பரிசோதித்ததில் பெரியசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.