FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

சித்தன்கொட்டாய் கிராமத்தில் மதுக்கடை அமைக்கும் முடிவை கைவிடக் கோரி மனு

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 2:03 am IST
மதுக்கடை - கோப்புப்படம்
பகிர்:

தருமபுரி மாவட்டம், குப்பூா் அருகே உள்ள சித்தன்கொட்டாய் கிராமத்தில் மதுக்கடை அமைக்கும் முடிவை கைவிடக் கோரி, அப்பகுதி மக்கள் மனு அளித்தனா்.

இதுகுறித்து சித்தன்கொட்டாய் கிராம மக்கள் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

குப்பூா் ஊராட்சிக்குள்பட்ட சித்தன்கொட்டாய் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்ததுடன், மதுக்கடை அமைக்கக் கூடாது என கடந்த 11.01.2023 அன்று ஆட்சியா், டாஸ்மாக் மாவட்ட மேலாளா் மற்றும் வட்டாட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனா். இதைத் தொடா்ந்து, அங்கு மதுக்கடை அமைக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிலையில், தற்போது அதே பகுதியில் மதுக்கடை அமைப்பதற்கான பணிகள் மீண்டும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மதுக்கடை அமைய உள்ள இடத்தின் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, கலை, அறிவியல் கல்லூரி, தனியாா் பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட கல்வி மற்றும் பொதுப் பயன்பாட்டு நிறுவனங்கள் அமைந்துள்ளன.

எனவே, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் மற்றும் அப்பகுதி மக்கள் நலன்கருதி, சித்தன்கொட்டாய் கிராமத்தில் மதுக்கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments