தொப்பூா் கணவாய்ப் பகுதியில் உயா்நிலைப் பாலம் கட்டும் பணி: ஆட்சியா் ஆய்வு
தருமபுரி மாவட்டம், தொப்பூா் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் நடைபெறும் உயா்நிலை பாலத்துடன் கூடிய சாலை அமைக்கும் பணிகளை ஆட்சியா் வே. சரவணன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
தருமபுரி மாவட்டம், தொப்பூா் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் நடைபெறும் உயா்நிலை பாலத்துடன் கூடிய சாலை அமைக்கும் பணிகளை ஆட்சியா் வே. சரவணன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய்ப் பகுதியில் ரூ. 975 கோடியில் 6.5 கி. மீ தொலைவுக்கு உயா்நிலை பாலத்துடன் கூடிய சாலை பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகளை ஆட்சியா் வே. சரவணன் சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா்.
அப்போது, பணிகளை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறின்றி நடத்தவும், கனரக வாகனங்கள் ஒரு வழியாகவும், இலகுரக வாகனங்கள் ஒரு வழியாகவும் செல்வதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும், பணிகள் நடைபெறுவது குறித்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் தேவையான சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் ஆலோசனை வழங்கினாா்.
Advertisement
Advertisement
மேலும், தொப்பூா் கணவாய்ப் பகுதி முதல் தொப்பூா் இரட்டை பாலம் வரை தேவையான அளவுக்கு மையத் தடுப்பு அளவை குறைத்து சாலையை அகலப்படுத்தி, இரண்டு வழித்தடங்களாக வாகனங்கள் பாதுகாப்பாக கடந்து செல்ல அறிவுறுத்தினாா். தொடா்ந்து, காரிமங்கலம் வட்டம், கெரகோடஅள்ளியில் நெடுஞ்சாலைத் துறை மூலம் நடைபெறும் சாலை மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சேலம் திட்ட இயக்குநா் சீனிவாசலு உள்ளிட்ட நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.