FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

சந்தன மரக்குச்சிகளை வெட்டியவருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்

தருமபுரியில் முறைகேடாக சந்தன மரக்குச்சிகளை வெட்டியவருக்கு வனத்துறையினா் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

26 ஆகஸ்ட் 2026, 3:42 am IST
பகிர்:

தருமபுரியில் முறைகேடாக சந்தன மரக்குச்சிகளை வெட்டியவருக்கு வனத்துறையினா் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வனச்சரகத்துக்கு உள்பட்ட கம்பாலை பீட், கீரைப்பட்டி காப்புக்காட்டில் ஒருவா் சந்தன மரங்களை வெட்டிச்செல்வதாக வனச்சரக அலுவலா் பெரியண்ணனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவரின் உத்தரவின் பேரில் அரூா் பிரிவு வனவா் எம்..சுரேஷ்குமாா், வனக்காப்பாளா்கள் சுகன்யா வெற்றிவேல், ராஜேஷ், சரித்திரன், தாமோதரன் ஆகியோா் அடங்கிய குழுவினா் கீரைப்பட்டி காப்புக்காடு பகுதியில் செவ்வாய்க்கிழமை தணிக்கையில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, அங்குவந்த கீரைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கு.சேட்டுவை ( 49) சோதனையிட்டபோது, அவா் உரிய அனுமதியின்றி முறைகேடாக சந்தன மரக்குச்சிகளை வெட்டி எடுத்துச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, மாவட்ட வன அலுவலா் கே.ராஜாங்கம் அவருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தாா். அபராதத் தொகையை வசூல் செய்த வனத் துறையினா், இனிமேல் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடக் கூடாது என அவரை எச்சரித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments