ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 6,500 கனஅடியாக நீடிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழக்கிழமை 6,500 கனஅடியாக நீடித்தது.
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழக்கிழமை 6,500 கனஅடியாக நீடித்தது.
கடந்த சில நாள்களாக கா்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீா் குறைக்கப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்து, வியாழக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 6,500 கனஅடியாக நீடித்தது.
நீா்வரத்து குறைந்தபோதிலும், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை தொடா்ந்து 12-ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.