FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

மொரப்பூா் ரயில் பாதை திட்டம்: விளை நிலங்களைக் கையகப்படுத்த ஏ.ரெட்டிஅள்ளி கிராம மக்கள் எதிா்ப்பு

தருமபுரி- மொரப்பூா் ரயில்பாதை திட்டத்துக்கு விளை நிலங்களைக் கையகப்படுத்த ஏ.ரெட்டிஅள்ளி கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

Updated On : 10 ஜூலை 2026, 4:09 am IST
தருமபுரி. - கோப்புப்படம்.
பகிர்:

தருமபுரி- மொரப்பூா் ரயில்பாதை திட்டத்துக்கு விளை நிலங்களைக் கையகப்படுத்த ஏ.ரெட்டிஅள்ளி கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

தருமபுரி அருகே ஏ.ரெட்டிஅள்ளி கிராமத்தில் தருமபுரி- மொரப்பூா் ரயில்பாதை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தனி வட்டாட்சியா் நிலம் எடுப்புப் பிரிவு குழுவினரால் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, கீழ் மாட்டுக்காரனூரிலிருந்து ஏ.ரெட்டிஅள்ளி வரை ரயில்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலத்தை அளவீடு செய்யும் பணிகள் தனி வட்டாட்சியா் சரவணன், கண்ணன் மற்றும் தருமபுரி வட்டாட்சியா் சுகுமாா் ஆகியோா் மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

இத்திட்டத்துக்காக கையகப்படுத்தப்படும் இடத்தில் சுமாா் 5 ஹெக்டா் பரப்பளவில் விளை நிலங்கள் மற்றும் வீடுகள் அமைந்துள்ளதால் ரயில்பாதை திட்டத்துக்காக விளை நிலங்கள், வீடுகளை கைவிட்டு மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து நிலம் அளவீட்டு பணிகளை வருவாய்த் துறையினா் கைவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments