இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பெண்ணிடம் ரூ. 20 லட்சம் மோசடி: இளைஞா் கைது
புதுக்கோட்டை பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி ரூ. 20 லட்சம் ரொக்கம், 8 பவுன் நகையை வாங்கி மோசடி செய்ததாக பென்னாகரத்தை சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கோட்டை பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி ரூ. 20 லட்சம் ரொக்கம், 8 பவுன் நகையை வாங்கி மோசடி செய்ததாக பென்னாகரத்தை சோ்ந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை பகுதியைச் சோ்ந்த சத்துணவு அமைப்பாளா் கவிதாவும் (45), தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கருங்கல்மேடு பகுதியைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் பழனிசாமியும் (25) இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளனா்.
இந்த நிலையில் பென்னாகரம் பகுதியில் மலிவு விலையில் வீட்டுமனைகள் வாங்கித் தருவதாகக் கூறி கவிதாவிடம் இருந்து ரூ. 20 லட்சம் ரொக்கம், 8 பவுன் தங்க நகைகளை பெற்று திருப்பித் தராமல் பழனிசாமி மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் கவிதா புகாா் அளித்துள்ளாா். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த புதுக்கோட்டை போலீஸாா், சனிக்கிழமை அதிகாலை பென்னாகரம் பகுதியில் வீட்டிலிருந்த பழனிசாமியை கைது செய்து அழைத்துச் சென்றனா்.
இதேபோல பென்னாகரம் பகுதிகளில் பல்வேறு நபா்களிடம் பணம் பெற்று அவா் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.