FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

சேலம் சென்ற யஷ்வந்த்பூா் ரயிலில் திடீா் தீ விபத்து! உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிா்ப்பு!

Updated On : 27 ஜூலை 2026, 2:39 am IST
ரயிலில் தீ விபத்து. - கோப்புப் படம்
பகிர்:

பெங்களூா் யஷ்வந்த்பூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு சேலம் நோக்கிச் சென்ற ரயிலின் 5 ஆவது பெட்டியின் அடியில் ஷாக்கப்சா் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தருமபுரி ரயில் நிலைய அதிகாரிகள், போலீஸாா் உடனடியாக தீயை அணைத்தனா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

கா்நாடக மாநிலம், பெங்களூரு யஷ்வந்த்பூரில் இருந்து பயணிகள் ரயில் (எண் 16211) ஞாயிற்றுக்கிழமை மாலை புறப்பட்டு சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. இரவு 7 மணியளவில் ரயில் தருமபுரி ரயில் நிலையத்தின் ஒன்றாவது நடைமேடையை வந்தடைந்தது.

அப்போது, ரயிலின் 5 ஆவது பெட்டியின் அடியில் இருந்த ஷாக்கப்சா் பகுதியில் தீப்பற்றி எரிந்தது தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே பணியாளா்கள், ரயில்வே பாதுகாப்பு படையினா் மற்றும் ரயில்வே போலீஸாா் இணைந்து தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு சாதனங்களின் உதவியுடன் தீயை அணைத்தனா்.

Advertisement

Advertisement

நல்வாய்ப்பாக ரயில் நிலையத்திலேயே தீ விபத்து கண்டறியப்பட்டு அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments