FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவதை உறுதிசெய்ய வேண்டும்

Updated On : 28 ஜூலை 2026, 2:21 am IST
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்...
பகிர்:

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதை உறுதிசெய்ய வேண்டும் என மதுக்கூா் ராமலிங்கம் தெரிவித்தாா்.

தருமபுரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் சி.நாகராஜன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம் பேசியது:

மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாட வேண்டும் என ஆளுநா் மாளிகை சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிய மனோன்மணியம் சுந்தரனாா் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் அவா் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்துக்கு தள்ளப்படும் நிலை ஏற்கத்தக்கது அல்ல. மத்திய அரசின் ஆணைப்படி ஆளுநரின் இத்தகைய திணிப்பு கண்டிக்கத்தக்கது.

Advertisement

Advertisement

தமிழகத்தில் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த மரபு மற்றும் நடைமுறைகள்படி தமிழகத்தில் நடைபெறும் அரசின் அனைத்து விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும். இதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணி, குடிநீா் விநியோகம் உள்ளிட்ட துறைகளில் தனியாா்மயம் கூடாது. போராடினால் வெற்றிபெற முடியும் என்பதை புது தில்லி ஜந்தா் மந்தரில் நடைபெற்ற மாணவா்கள் போராட்டம் நிரூபித்துள்ளது என்றாா்.

இதில், மாநிலக் குழு உறுப்பினா் அ.குமாா், மாவட்டச் செயலாளா் இரா.சிசுபாலன், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments