தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும்! வன்னி அரசு
சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என வன்னி அரசு தெரிவித்துள்ளது குறித்து...
சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என சமுக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு இன்று (ஜூன் 17) தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசியதாவது:
''பல்வேறு துறைகளின் செயலாளர்கள், கூடுதல் செயலாளர்கள் வகுப்பு எடுத்தார்கள். சட்டப்பேரவையில் நாங்கள் புதியவர்கள் என்பதால், இந்த இரண்டு நாள்களும் பயனுள்ளதாக இருந்தது.
Advertisement
Advertisement
நாளை சட்டப்பேரவைத் தொடங்கவுள்ளது. காலை 9 மணிக்கு வர அறிவுறுத்தியுள்ளனர். நாளை ஆளுநர் உரை தொடங்குகிறது. இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை நாளையே தெரியும். எது நடந்தாலும் சட்டத்திற்குட்பட்டு நடக்கும்.
ஆணவக் கொலை தொடர்பாக 3 முக்கிய கோரிக்கைகளை முதல்வரிடம் நேற்று வழங்கினோம். இது குறித்து கலந்துரையாடுவேன் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
முன்னாள் நீதியரசர் பாட்ஷாவின் பரிந்துரையையொட்டி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற கோரிக்கை வைத்தோம்.
பஞ்சமி நிலங்களை மீட்பது தொடர்பாக தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என கோரியுள்ளோம்.
தமிழகம் முழுக்க மனைப்பட்டா குறித்து பிரச்னை உள்ளது. மனை, மனைப் பட்டா இல்லாத மக்கள் உள்ளனர். அவர்களுக்கான தேவை குறித்துப் பேசியுள்ளேன்.
எங்கள் துறை சார்ந்து இல்லாமல், சிறப்பு முகாம்களில் ஈழத் தமிழர்கள் பல்வேறு வழக்குகளில் உள்ளனர். வழக்கு முடிந்தவர்கள் இன்னும் சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும். இறுதியில் தேசிய கீதம் பாடப்படும் என்பது விதி. அந்த விதிப்படி நடக்கும் என நம்புகிறேன்'' எனக் குறிப்பிட்டார்.
Tamil Thai Vazhthu must be sung first in assembly Vanni Arasu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.