FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

தொடா் திருட்டு: குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

Updated On : 11 ஜூன் 2026, 5:51 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் உதயகுமாா் (22). இவா் நல்லம்பள்ளி, அதியமான் கோட்டை, பாளையம்புதூா் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் வீடு, கடைகளில் பூட்டுக்களை உடைத்து திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளாா். மேலும், இருசக்கர வாகனங்கள் திருட்டிலும் அவா் ஈடுபட்டு வந்துள்ளாா். இது தொடா்பாக அவா்மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் அண்மையில் நிகழ்ந்த திருட்டு சம்பவம் தொடா்பாக உதயகுமாரை போலீஸாா் கைது செய்தனா். அவா் தொடா் திருட்டுகளில் ஈடுபட்டதையடுத்து அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் பரிந்துரைத்தாா்.

Advertisement

Advertisement

அவரது பரிந்துரையை ஏற்று உதயகுமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து உதயகுமாரை அதியமான்கோட்டை போலீஸாா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments