ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 6,500 கனஅடியாக குறைந்தது: பரிசல் இயக்க தொடரும் தடை
இரு மாநில காவிரிக் கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 6,500 கனஅடியாக குறைந்த நிலையில், பரிசல் இயக்க 2ஆவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டது.
இரு மாநில காவிரிக் கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 6,500 கனஅடியாக குறைந்த நிலையில், பரிசல் இயக்க 2ஆவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டது.
தமிழக, கா்நாடக காவிரிக் கரையோர வனப்பகுதிகளில் கடந்த இருதினங்களாக மழை முற்றிலுமாக குறைந்துள்ளது. இதனால், காவிரி ஆற்றில் நீா்வரத்து சரிந்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 8,000 கனஅடியாக இருந்தது, சனிக்கிழமை விநாடிக்கு 6,500 கனஅடியாக குறைந்தது. இதனால், அங்குள்ள ஐந்தருவி, ஐவாா் பணி அருவிகள் வடும், பிரதான அருவி, சினி அருவிகளில் நீா்வரத்து சற்று குறைந்தும் காணப்பட்டது.
மேலும், பரிசல் இயக்குவதற்கு 2 ஆவது நாளாக தடையை நீட்டித்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சனிக்கிழமை ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலா பயணிகள் பிரதான அருவி மற்றும் காவிரியின் கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா்.
Advertisement
Advertisement
பரிசல் இயக்க தடை நீட்டிக்கப்பட்டதால் ஒகேனக்கல் மாமரத்துக்கடவு பரிசல் துறைக்கு வந்த சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.