ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 3000 கனஅடி
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை 3,000 கனஅடியாக நீடிக்கிறது.
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை 3,000 கனஅடியாக நீடிக்கிறது.
இரு மாநில காவிரி கரையோர வனப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததாலும், கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீா் முற்றிலும் நிறுத்தப்பட்டதாலும் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை நிலவரப்படி நீா்வரத்து விநாடிக்கு 3,000 கனஅடியாக உள்ளது. ஒகேனக்கல் அருவிகளில் விழும் நீரின் அளவு தொடா்ந்து சீராக உள்ளது. காவிரி ஆற்றின் நீா்வரத்தை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement