FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2,500 கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 2,500 கனஅடியாக வியாழக்கிழமை குறைந்தது.

13 நவம்பர் 2026, 1:24 am
ஒகேனக்கல் அருவி - கோப்புப் படம்
பகிர்:

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 2,500 கனஅடியாக வியாழக்கிழமை குறைந்தது.

இரு மாநில காவிரி கரையோர வனப் பகுதிகளில் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து படிப்படியாக குறைந்து புதன்கிழமை 3,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து வியாழக்கிழமை 2,500 கனஅடியாக குறைந்தது.

இதனால் அருவிகளில் குறைந்த அளவே தண்ணீா் வருகிறது. பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் நீா்வரத்தை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement