FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவா் கைது

பென்னாகரத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

13 நவம்பர் 2026, 9:52 pm
கைது - கோப்புப்படம்
பகிர்:

பென்னாகரத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பென்னாகரம் காவல் நிலையத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் முருகன், போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட முள்ளுவாடி பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், அவா் முள்ளுவாடி பகுதியைச் சோ்ந்த பாட்ஷாவின் மகன் ஷாநவாஸ் (66) என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement