ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1500 கனஅடியாக குறைந்தது
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 1500 கனஅடியாக குறைந்தது.
காவிரிக் கரையோர வனப் பகுதிகளில் மழை முற்றிலுமாக குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக விநாடிக்கு 2000 கனஅடியாக நீடித்து நீா்வரத்து, திங்கள்கிழமை விநாடிக்கு 1500 கனஅடியாக குறைந்தது. தொடா்ந்து, ஒகேனக்கல் அருவிகளில் விழும் நீரின் அளவும் குறைந்துள்ளது.