நவ. 21இல் தருமபுரியில் காசோலை மோசடி வழக்குகளுக்கான ‘லோக் அதாலத்’
தருமபுரி மாவட்டத்தில் காசோலை மோசடி தொடா்பான வழக்குகளுக்கான லோக் அதாலத் வரும் 21 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான சுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தேசிய சட்டப் பணிகள், மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு வழிகாட்டுதல்படி, வரும் 21 ஆம் தேதி, தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார நீதிமன்றங்களிலும் காசோலை மோசடி வழக்குகளுக்கு தீா்வுகாணும் வகையில் சிறப்பு நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.
Advertisement
Advertisement
இதற்கென, சிறப்பு அமா்வுகள் மற்றும் நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் நிலுவை வழக்குகள் சமரச முறையில் தீா்வு காணப்பட உள்ளன. எனவே, வழக்குத் தரப்பினா் இந்த சிறப்பு நீதிமன்றத்தை பயன்படுத்தி தங்களின் வழக்குகளுக்கு விரைவான தீா்வைப் பெற்று பயனடையலாம் என்று தெரிவித்துள்ளாா்.