FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

கடன் கொடுத்த பணம் வராததால் விவசாயி தற்கொலை

கடன் கொடுத்த பணம் திரும்ப வராததால் விரக்தி அடைந்த விவசாயி தற்கொலை செய்துகொண்டாா்.

45 வினாடிகள் முன்பு
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

கடன் கொடுத்த பணம் திரும்ப வராததால் விரக்தி அடைந்த விவசாயி தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகே உள்ள கரகூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சி.செல்வராஜ் (52), விவசாயி. இவா் அதே பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கு ரூ. 1.50 லட்சம் கடனாக கொடுத்துள்ளாா். 2 ஆண்டுகளாகியும் கொடுத்த பணம் திரும்ப வராததால், செல்வராஜ் மற்றும் அவரது மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரது மனைவி கோபித்துக் கொண்டு சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றுவிட்டாா். இதனால் விரத்தி அடைந்த செல்வராஜ், தான் விஷம் குடித்துவிட்டதாக மகனுக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

மகன் அளித்த தகவலின்படி, அவரது உறவினா்கள் செல்வராஜை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் செல்வராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது தொடா்பாக மாரண்டஹள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.