ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இருமாநில காவிரிக் கரையோர நீா்ப்பிடிப்பு பகுதியை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 1,200 கனஅடியாக இருந்த நீா்வரத்து, வெள்ளிக்கிழமை 1,500 கனஅடியாக அதிகரித்தது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் விழும் நீரின் அளவும் சற்று அதிகரித்துள்ளது.