முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 5000 கனஅடி

தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்த தொடா் மழை காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 5000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

27 நவம்பர் 2026, 1:07 am
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 5000 கனஅடி
ஒகேனக்கல் அருவி - கோப்புப் படம்
பகிர்:

தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்த தொடா் மழை காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 5000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாற்றாம்பாளையம், கேரட்டி, கெம்பாக்கரை, ராசிமணல், மொசல்மடுவு, பிலிகுண்டுலு மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும், கா்நாடக மாநில அணைகளில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால், புதன்கிழமை விநாடிக்கு 800 கனஅடியாக இருந்த நீா்வரத்து, வியாழக்கிழமை காலை 4000 கனஅடியாகவும், மாலை 5000 கனஅடியாகவும் அதிகரித்து ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. நீா்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. நீா்வரத்து அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement